Pages

Tuesday, January 14, 2014

தண்ணிகாட்டும் தண்ணிவண்டி...தவிக்கும் கட்டுமரம்..!


இப்படி ஒரு அவமானம் கருணாநிதிக்கு இதற்க்கு முன் ஏற்பட்டிருக்குமா எனபது சந்தேகம்தான்....

1984 அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் - உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த சமயத்தில், எம்ஜிஆர் உயிரோடு திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான், கருணாநிதி, தனது பதவி ஆசையை பகிங்கரமாக தெரியப்படுத்தினார்...

இப்போது ஆட்சியை என்னிடம் கொடுங்கள்...எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அதை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று, உலகத்தில் எந்த அரசியல்வாதியும் சொல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி, மக்களிடம் கெஞ்சினார்....

"தமிழர்களே தமிழர்களே...என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தாலும் அதில் நான் கட்டுமரமாக மிதப்பேன்...நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் " போன்ற வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய அவரது கெஞ்சல்கள் அந்த காலத்தில் மிகப்பிரபலம்...

இப்படி பதவி வெறி பிடித்து அப்போது கெஞ்சினாலும், அது அவரது  சக தோழர் - மற்றும் சம எதிரி (எம்ஜிஆர்) என்ற நிலையிலேயே - ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது....

அனால் இன்றோ - அந்த கட்டுமரமாகிய கருணாநிதியின் நிலைமை படு கேவலமாக உள்ளது....பதவி வெறியும் குடும்ப அரசியலும் அந்த 90 வயது முதியவரை, எவ்வளவு கேவலமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு கேவலமாக கொண்டு  சென்று கொண்டிருக்கிறது....

முதலில் எம்ஜிஆருடன் போட்டிபோட்டு தோற்று கொண்டிருந்தவரின் நிலை பிறகு ஜெயலலிதா என்ற அளவிற்கு இறங்கி, இன்று விஜயகாந்தை கெஞ்சோ கெஞ்சு  என்று கெஞ்சுமளவிற்கு இறங்க வைத்துள்ளது அவரது பதவி வெறி....

தனது மகள் கனிமொழியை ராஜ்யசபா  எம்பி பதவிக்கு நிறுத்தும்போதே, - நிச்சயம் தோற்போம் என்று தெரிந்தே அவருக்கு எதிராக விஜயகாந்த் - தமது கட்சி வேட்பாளரை நிருத்தியபோதே மூக்குடைபட்ட போதும்,  -- ஏறத்தாழ (1996 -2013) பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அனுபவித்தபதவி  சுகம்,  பெற்ற மகனையே தூக்கி எறிய வைத்துள்ளது...

ஒருபக்கம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - என்று சொல்லி விட்டு, குலாம் நபி ஆசாத்துடன் கூடிக்குலவுவது, - பயங்கரவாத பி.ஜே.பி யுடன் கூட்டணி இல்லை என்று - பயங்கரவாத பன்றி மோடியை புகழ்ந்து, ஜாடை காட்டுவது, - "விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி" என்று பட்ட அவமானத்தை துடைத்துவிட்டு  - தூது விடுவது போன்ற கேவலமான செயல்களால் மேலும் கேவலப்பட்டு நிறுக்கும் கருணாநிதி,  விஜயகாந்துடன், கூட்டணி வேண்டாம் என்ற காரணத்திற்காக தனது மகன் அழகிரிக்கே எச்சரிக்கை விடுகிறார் என்றால் இவரது பதவி வெறியை என்னவென்பது?

இவ்வளவு நடந்தும், விஜயகாந்த் - தமது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து கருணாநிதி என்ற கட்டுமரத்தை தவிக்கவிட , அதற்காக கருனாநிதி காத்திருக்க, இவ்வளவு அனுபவம் உள்ள அரசியல்வாதிக்கு இதைவிட ஒரு   கேவலம்  உண்டா?

வெறும் பசப்பு வார்த்தைகளாலும், பொருத்தமற்ற  ஜவ்வு போன்ற பதிலகளாலும், தமது அறுபது  ஆண்டுகால அரசியலை ஒட்டிவிட்ட கருணாநிதியால், - எதையும் துணிந்து சொல்லும் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே நிஜம்..

எல்லா எதிர்ப்புகளிலும் கம்பீரமாக நின்ற திமுகழகம் என்ற அந்த கட்டுமரம், இன்று - ஓட்டு வங்கி கணக்கில், தண்ணி காட்டும் விஜயகாந்தின் கண்ணசைவுக்காக காத்திருப்பது  - அரசியல் எனபது இன்னும் சாக்கடைதான் என்பதை மேலும் மேலும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது....

ராஜதந்திரம் எனபது கெஞ்சிக்கொண்டிருப்பது அல்ல.....கருணாநிதி ராஜ தந்திரியும் அல்ல....



Monday, January 13, 2014

ஜில்லா - பொறுக்கிகளின் ராஜ்ஜியம் .




காவல் துறையை கேவலப்படுத்தும் இன்னொரு கேவலமான திரைப்படம்..

பொதுவாக ஒரு திரைப்படம பார்க்கக்போகும் முன்பு, விமர்சனங்களை, வலைத்தளங்களில் பார்த்துவிட்டுத்தான் போவேன்...

10 ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜில்லா மற்றும் வீரம் போன்ற திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஜில்லாவுக்கு வீரம் தேவலாம், ஆனால் இரண்டும் ஒரே கமெர்சியல் மசாலா எனபது போன்ற - பாசிடிவ் விமர்சனங்கலேதான் - மேதாவி விமர்சகர்கள் எழுதி இருக்கிறார்கள்...

இவர்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு என்ன அளவு கோள்களை வைத்திருக்கிறார்கள் என்பதுததான் நமக்கு விளங்கவில்லை....

இன்னமும் திரைப்படங்களை, அதுவும் தமிழ் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்கு அம்சம், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க முடியாது...

இன்று தமிழ்நாட்டின் தலைஎழுத்தை சினிமாக்கள்தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள்...

ஆனால் பதிவுலகில் சில அதிமேதாவிகள், கூத்தாடிகளை, தலைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் அடிமைகலான  விசிலடிச்சான் கொஞ்சுகளின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகத்தான் விமர்சனங்கனில் கையாளுகிறார்களே தவிர தமது அறிவை சிறிதளவேனும் உபயோகப்படுத்துவதாக தெரியவில்லை...

விஜய் கலந்து கட்டியிருக்கிறார், அஜித் அமர்க்களப்படுத்தி இருக்கிறார், மோகன்லால் அற்புதமாக நடித்திருக்கிரார்ல் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிரார்களே தவிர, அவன் என்ன "எழவை" கதையாக சொல்லி இருக்கிறான் என்பதை இந்த டாஸ்மாக் அடிமைகள் கண்டு கொள்வதில்லை...

வில்லனான தந்தையை மகன் திருத்தும் ஆயிரத்து நூறாவது கதை இது வென்றாலும், அதுபோன்ற திரைப்படங்களில், தந்தை செய்வது தவறு என்றும், அதை இறுதிக்காட்சியில் அவன் உணர்ந்து தண்டனை அடைவது போன்றும் காட்டி இருப்பார்கள்....

ஆனால் இப்படத்தில், மோகன்லால் என்றொரு பிம்பம், அவன் தவறே செய்தாலும், நாமளும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அதை தவறு என்று உணரும் விதமாகக் கூட இல்லாமல், எல்லார் செய்வதும் சரிதான் என்று கேனத்தனமாக கதை யமைத்து, அதற்க்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்தும், டாஸ்மாக் அடிமைகளை திருப்தி படுத்த மட்டுமே படம் எடுக்கும் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்யலாம்?

கதாநாயகனும், அவனது தந்தையாக வருவோனும், மதுரையை ஆட்டிப்படைக்கும் பொறுக்கிகளாக - பெரிய மனிதராக காட்டி இருப்பது மட்டுமல்ல, பெரிய மனிதராக வரும் மோகன் லால், வீட்டில் அமர்ந்து "சுருட்டு" பிடிப்பதை தவிர வேறொன்றும் கிழித்ததாக தெரியவில்லை..

அவரது மகனாக வரும் விஜயும் - படம் முழுவதும் பொறுக்கிகளோடு சண்டை இடுவதும், கதானாகியில் பின் புறத்தை பிசைவதுமகத்தான் இருக்கிறான்..

படத்தில் வரும் அத்தனை போலீசாரும் மிகக்கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்...

படத்தில் மோகன்லாலும், விஜயும் எல்லாரையும் அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், கொலை பண்ணுகிறார்கள், இவ்வளவையும் ஜாலியாக செய்துவிட்டு, ஒரு இடத்தில் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதும், விஜய் மனம் திருந்துவதாக காட்டுவது - இயக்குனரின் மூளை வரட்சியையே காட்டுகிறது...

மினிஸ்டராக வரும் வில்லன், படம் முழுவதும், ஊர் பெரியமனிதர் வீட்டிலேயே உண்டுகொண்டு இருப்பதும் கேலித்தனமாக இருக்கிறது..

ஒருவனை குறுக்கு வழியில் போலீஸ்காரனாக்கும் மினிஸ்டரால், அவனை வேலையை விட்டு தூக்க முடியவில்லை  எனபது, மூளையில்லாதவன் வேண்டுமானால் நம்பலாம்....

போலீஸ்காரன் ஆனதும், வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன் எங்கேதான் தங்கி இருக்கிறானோ தெரியவில்லை...

வில்லனை போட்டுத்தள்ளி விட்டு இறுதிக்காட்சியில் - மீண்டும், ஊர்பெரிய மனிதர் வீட்டுக்கே வந்து விடுகிறான்...


தமிழ்நாட்டுக்காரன் டாஸ்மாக் அடிமைதான் - இவனை சுலபமாக ஏமாற்றி கல்லா  காட்டிவிடலாம் என்று பொறுக்கிகளை நாயகர்களாக ஆகும் அவலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருப்பது - கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய (?) டாஸ்மாக் தமிழ் அடிமைகளுக்குத்தான் அவமானம்....!!!