Pages

Monday, October 31, 2011

ஏழாம் அறிவு - சிற்றறிவு.



பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளை திரைப்படங்களாக எடுக்கும்போது - அதைப்பற்றிய ஒரு பிரம்மாண்டத்தை பரப்பிவிடுவது இங்குள்ள சினிமாக்காரர்களுக்கும், அதை நம்பியே வாழும் ஆபாச ஊடகங்களுக்கும், அதைப்பற்றியே பிரஸ்தாபிக்கும் - இலவச விளம்பரதாரர்களான பதிவர்களுக்கும் ஒரு கடமையாகிவிட்டது. 


பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த ஒரு மன்னன் சீனாவிற்கு சென்று அங்கு வாழ்ந்த  மக்களை ஆபத்திலிருந்து  காப்பாற்றியது மட்டுமல்லாமல் சில கலைகளையும் கற்றுகொடுத்ததாகவும், இன்னும் அங்கு அவர் தெய்வமாக போற்றப்படுவதாகவும் அந்த மன்னன் தமிழன் என்றும் பீலா விட்டிருக்கும் கதைதான் ஏழாம் அறிவு.

 பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு   காஞ்சிபுரம் புகுதியை ஆண்ட ஒரு மன்னன் தனது  மகன் போதி தர்மனை சீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். - மூன்றாண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு கொடிய நோய் பரவப்போகிறது, எதிரிகள் தாக்கப்போகிரார்கள் என்று அறிந்த அந்த தந்தைக்கு, தனது மகன் அதே சீனர்களால் விஷம் வைத்து கொல்லப்படுவான்  என்று அறியாதது வேடிக்கையே..

இவர்களால் தமிழர் என்று போற்றப்படும் போதி தர்மர், சீனர்களுக்கு வித்தைகள் மற்றும் அறிய மருத்துவ கலைகளை கற்று கொடுத்ததாக சொல்லும் இவர்கள், அவர்களுக்கு எந்த மொழியில் இதையெல்லாம் பயிற்றுவித்தார் என்று காட்டவே இல்லை. காரணம் போதி தர்மர் சீனர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசியதாக காட்டப்படவே இல்லை..ஊமை பாஷை பேசுவது போல தான் இருக்கிறது..எப்படி இவர் அறிய குறிப்புகளை கொடுத்தார் என்றே தெரியவில்லை.

தங்களை உயர்த்திக்கொள்வதர்காக  , மற்றவர்களை கொடியவர்களாக சித்தரிக்கும் இந்த போக்கு எவ்வளவு பயங்கரமானது என்று இவர்கள் அறியவில்லையா? தம்மை எல்லாவிதத்திலும் காப்பாற்றிய போதிதர்மனை அந்த சீனர்களே விஷம் வைத்து கொன்றதாகக்காட்டுவது எவ்வளவு பெரிய நயவஞ்சகத்தன்மை? எப்பேர்ப்பட்ட வரலாற்று திரிபு?

தற்காலத்துக்கு வரும் கதையில், பதினாறாம் நூற்றாண்டில் சீனர்களுக்கு வந்த அதே பயங்கரமான வியாதியை, இந்தியாவுக்கு பரப்பி, அதன் மூலம் இந்தியர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சீனர்களின் தந்திரம் என்றால்,   இந்த வியாதி சீனாவுக்கு பரவும் என்று முன்கூட்டியே யூகித்து தன மகன் போதி தர்மனை அனுப்பி அவர்களை  போதி தர்மனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தந்திரம் யாருடையது..?அப்படி பார்த்தால் அந்த வியாதியை சீனர்களுக்கு பரப்பி விட்டது போதி தர்மனின் தந்தையா ? என்ற எண்ணம் ஏற்படுவதற்கு காரணம் இவர்களது  கதையமைப்புதான்.

இந்தியாவில்  போதி தர்மனைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவியை கொள்வதற்காக வரும் டான்க்லீ என்ற வில்லன் எல்லாரையும் "நோக்கு வர்மம்" மூலம் தன கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறான்..அப்படி நோக்கு வர்மத்தால் கட்டுப்பட்டவர்கள் எல்லாம், - ஒரு சந்தர்பத்தில் சகல கலைகளையும் கற்றவர்கள் போல சண்டை போடுவது மாபெரும் கேலி கூத்து..? நோக்கு வர்மத்தில் ஒருவனது மனதை கட்டுப்படுத்தலாம் என்றுதான் அவர்களே கூறுகிறார்கள் ..எனில்...சகல கலைகளையும் எப்படி நிமிடத்தில் கற்றுக்கொன்றார்கள் என்ற கேள்வி எழுகிறது..

அந்த வில்லனில் வேலையே படம் முழுவதும் எல்லாரையும் நோக்கு வர்மத்தால் கொல்வதே. அப்படி இருக்கும்போது கதாநாயகியைக் கொல்வதற்கு ஏன் அவ்வளவு சிரமப்பட வேண்டும்? அவனது கைக்கூலி புரபாசர்ரிடம் சொன்னால் அந்த மாணவி வரப்போகிறாள். நோக்கு வர்மம் மூலம் அவளை கட்டுக்குக்குள் கொண்டுவந்து கத்தியை வைத்தோ தூக்கு மாட்டிக்கொண்டோ தற்கொலை செய்துகொள்ள செய்திருக்கலாம் தானே?

டி ஏன் எவை தூண்டுவதன் மூலம் போதி தர்மனின் வம்சா வழியை சேர்ந்த ஒருவனுக்கு அந்த திறமையை கொண்டு வருகிறார்களாம்..சிரிப்பாக இருக்கிறது..அந்த திறமையை பெற்ற அவன், அதே நேரத்தில் சிக்ஸ் பேக் உடம்பையும் பெறுவது மெகா மெகா நகைச்சுவை..

விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக தமிழர்களை உசுப்பேற்றும் வசனங்களை அங்கங்கே தூவி இருக்கிறார்கள்..இந்த படத்தில் வரும் ஒரு வசனம் போல - தமிழ் தமிழர்கள் என்று பேசுவது இவர்களுக்கெல்லாம் பேஷனாகி விட்டது..

மலேஷியாவில் அடிக்கிறான், இலங்கையில் அடிக்கிறான் கடைசியில் இந்தியாவிலேயே வந்து அடிக்கிறான் என்ற வசனம் வெறுப்பாக இருக்கிறது..

மலேசியாவில் சட்டத்தை மீறினால் இவர்களை தடவி கொடுக்க வேண்டுமா?

இலங்கையில் நடந்தது துரோகமாம்.. இலங்கையில் போரிட வக்கில்லாமால், இந்தியாவை தலை  இட செய்தது மட்டுமின்றி, நமது நாட்டிலேயே குண்டு வைத்து வன்முறை செய்ததற்கு என்ன பெயராம்?

கதாநாயகனுக்கு இப்படத்தில் வேலை குறைவுதான்...அதிலும் நடிப்பே வரவில்லை எனபது மகா ஆச்சரியம்.

சீனாவுக்கு எல்லா கலைகளையும் கற்று கொடுத்தது தமிழன்தான் என்று கதை விட்டது போல, அமெரிக்காவுக்கு அணுகுண்டை கற்று கொடுத்தது, ரஷ்யாவுக்கு கம்யூனிசத்தை சொல்லி கொடுத்தது, அரபு நாடுகளுக்கு எண்ணைவளத்தை கண்டு பிடித்தது, இன்னும் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் காரணம் தமிழன்தான் என்று வரிசையாக ரீல் விட ஆரம்பித்து விடுவார்கள்..
காத்திருப்போம்..காதுகளில் பூச்சுற்றியபடி..
படம் எடுக்கிறானாம் படம்..

Tuesday, October 18, 2011

நடு நிலைமை என்னும் நயவஞ்சகம்



ஆறு மாதங்களுக்கு முன்புதான் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது..அப்போது இவ்வளவு அலப்பறை இல்லை...ஒலிபெருக்கிகளின் - ஒட்டுப்பொருக்கிகளின் கூக்குரல்கள்  இல்லை...பணம் பட்டுவாடா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது...
அப்போது தேர்தல் ஆணையத்தை வானாளவப் புகழ்ந்த ஊடகங்கள் - இந்த உள்ளாட்சி தேர்தலின்போது - பல்வேறு கட்சிகள் மீண்டும் காட்டுக்கத்தல்கள், ஒலிபெருக்கிகளின் அலறல்கள் சாலைகளை ஆக்கிரமித்து பொது மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியபோது, இப்போது மெளனமாக இருக்கும் மர்மம் புரியவில்லை..

கருணாநிதி ஆட்சியில் அத்துமீறல்கள் நடைப்ற்று இருக்கலாம்...அதற்க்கு தேர்தல் ஆணையம் உண்டாக்கிய கட்டுப்பாடுகள் தேர்தல் நியாயமாக நடைபெற காரணமாக இருந்திருக்கலாம்..ஆனால் ஜெயலலிதா ஒன்றும் உத்தமரல்லவே..தில்லுமுல்லுகள் தெரியாத பண்பாளர் அல்லவே..? 

இப்போது மட்டும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஏன்? 

அப்போது நடுநிலைமையோடு இருந்த தேர்தல் ஆணையம் இப்போது நடுநிலைமை தவறியது ஏன்?

இந்த வருடம் கட்டுப்பாடுகளை களைய காரணமாக இருந்தது எது? தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் கருணாநிதிக்கு மட்டும்தானா?

கருணாநிதியை காய்ச்சு காய்ச்ச்சிய மா மேதாவிகளான பதிவர்களும், ஆபாச பத்திரிக்கைகளும், கருணாதியை தாக்கும்போது முக்கியமான ஒன்றை சொல்வார்கள்..அது மின் வெட்டு..
ஜெயலலிதா வந்தவுடன் மின் வெட்டு நின்றுவிட்டதா?

விலை வாசி குறைந்து விட்டதா?
நாட்டில் அராஜகங்கள் ஒழிந்துவிட்டதா?

இப்போது பொதுமக்களுக்கு மின்சாரம் தேவை இல்லையா?
நாட்டில் பொறுக்கியிசம் ரவுடியிசம் ஒழிந்து விட்டதா?
விலைவாசி இறங்கி விட்டதா?
எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டார்களா?
விடுதலைப்புலிகளுக்கு தனி ஈழம்  கிடைத்து விட்டதா?
ராஜ பக்ஷே தண்டிக்கப்பட்டு விட்டாரா?
எங்கேடா உங்களது அலறல்கள்?
இப்போது என்ன பயம்?

நடுநிலைமை என்று ஏமாற்றும்  நயவஞ்சகவாதிகள்தானே நீங்கள்?
தேர்தல் வந்தால் கூக்குரலிடும் கோமாளிகள்தானே?