Pages

Saturday, July 30, 2011

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!


எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்பதால் இந்த பதிவு இங்கே பதிவிடப்படுகிறது..இது "சிந்திக்கவும்" என்ற இணையதளத்தில் வெளியானது.

"செய்திகள் அனைத்தும் மக்களுக்கே! காப்பி செய்து பயன்படுத்தலாம். அனுமதி பெற தேவையில்லை"


என்று அவர்களது  தளத்திலேயே அறிவித்து  இருப்பதால் அனுமதி பெறவில்லை...


இனி பதிவு..




  JULY 21, விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி, மற்றும் பொழுதுபோக்கு ஊடகம். எந்த ஊடகமும் பொருளாதார இலாபத்தை மையமாக வைத்துத்தான் ஆரம்பம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் அந்த பிராந்தியத்தின் மொழி, தேசம், இனம் சார்ந்த பண்புகளை கட்டிக்காக்கக்கூடிய பொறுப்புணர்வும், பகுத்தறிவும் கலந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாய் வந்திருக்கிறாள். அவளும், ரஜினியை கடவுள் என்கிறாள்,  ரஜினி நலம் பெற மொட்டைகள் அடித்துக்கொண்டு சில புத்திசாலிகள் இப்படி ஆரம்பிக்கிறது நிகழ்ச்சி.  என்ன நடக்கிறது இங்கே? யாரை வேண்டுமானாலும் கடவுளாக்கி விடும் அளவுக்கு இவ்வளவு அறிவு வறட்சி எப்படி வந்தது எம் தமிழ் இனத்துக்கு? 

கோபிநாத் கேள்வி கேட்கும் தொனியிலே அறிவுடைய மக்களுக்கு புரியும் இந்த மக்கள் எவ்வளவு புத்தி மழுங்கி விட்டார்கள் என்பது. கோபிநாத், "ஒரே மனிதரை, எத்தனை வகையில் மக்கள் மதிக்கிறார்கள்? ஒருவர் என் கடவுள் என்கிறார் ஒருவர் மனிதக்கடவுள் என்கிறார் ....., ஒருவர் என் ஆத்மா என்கிறார்...., ஒருவர் என் உயிர் என்கிறார்....., ஒருவர் என் வாழ்வு என்கிறார்...., நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன் என்று ஒருவர்.... அடேங்கப்பா" என்று கோபிநாத் சொல்லும்பொழுது அவரால் வெளிப்படுத்த முடியாத ஒரு அங்கலாய்ப்பும் இவ்வளவு அறிவு கெட்டு விட்டார்களே என்ற விசனமும் உள்ளூரதெரிகிறது.

இதுபோன்ற காட்சிகளும், தொடர்களும் ஒரு பக்குவமற்ற, கடைநிலை பார்வையாளர்களை, சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ரஜினியை "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பம் செய்து வைத்த ஸ்ரீ நிவாஸ் என்ற பாடகர் இதே போன்ற நிகழ்ச்சியை விஜய் TV ரஜினி போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கேரளாவில் நடத்தி இருந்து அவரிடம் இதே கேள்வியை கேட்டிருந்தால், "ரஜினி ஒரு கடவுள் என்று சொல்லி இருப்பாரா? அப்படி சொல்லி இருந்தால் ஸ்ரீ நிவாசை நிம்மதியாக தூங்க விட்டிருப்பார்களா கேரள மக்கள்?  ஸ்ரீ நிவாசுக்குத் தெரியும் தமிழகம் வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வாழ்வோர் வாந்தி எடுத்தாலும் அது நல்ல உணவு என்று ஏற்றுக் கொள்ளும் என்று.

இந்த பாட்டு போட்டி சுற்றுகளில் ஆன்மீகச்சுற்று என்று ஒன்று வைத்தார்கள். அதில் அனைத்தும் இந்துமத ஆன்மீக பாடல்களே போட்டியாளர்களால் பாடப்பட்டது. இந்த ஆன்மீக சுற்று போட்டியாக நடத்தப்படாமல் ஒரு ஷோவாகவே நடத்தப்பட்டது. அந்த சுற்றுக்கு மதிப்பெண்களும் இல்லை வெளியேற்றமும் இல்லை. அப்படி இருக்கையில் அதில் குறைந்த பட்சம் ஒரு இஸ்லாமிய பாடல் மற்றும் ஒரு கிருஸ்தவ பாடலையாவது பாடச்சொல்லி ஒளிபரப்பி இருக்கலாம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதத்தினராலும் பார்க்கப்படுகிற ஒரு பொது ஜன ஊடகத்தில் இப்படி ஒரு மத சார்ப்பு, அதே நேரம் மனிதனை கடவுள் என்று சொல்ல வைப்பது, தற்கொலையை ஊக்கப்படுத்துவது போல் உள்ள பேச்சுகளை சென்சார் இல்லாமல் அப்படியே வெளியிடுவது போன்றவை விஜய் டிவிக்கு அழகல்ல.

அதுபோல் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் இந்த விஞ்சான யுகத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை அவர்களுக்கு அதிசய சக்தி இருக்கிறது என்பது போல் காட்டுவது, ஒரு கோவிலில் காய்ந்த மிளகாயை போட்டு ஒரு யாகம் நடத்தப்படுகிறது அதற்க்கு சக்தி இருக்கிறது என்று கோபிநாத் புலம்புவது, இப்படி நடந்தது என்ன என்று உண்மை சம்பவத்தை காட்டாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கோபிநாத் தன் பேச்சாற்றல் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மேலும் மூட பழக்க வழக்கத்தில் மூழ்க செய்வதற்கே உதவும் என்பதை விஜய் டிவி புரிந்து கொள்ளுமா? நீயா நானா போன்ற நல்ல நிகழ்சிகளை அளிக்கும் விஜய் டிவி இதுபோல் உள்ள குறைகளை கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

                                                                                                               நன்றி "சிந்திக்கவும்"

Wednesday, July 27, 2011

ஆபாச வியாபாரிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!!!


கடந்த தி மு க ஆட்சியில் இயற்றப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் ஒன்றுதான் "தமிழில்" பெயர்வைக்கும் படங்களுக்கும் வரி விலக்கு  எனபது...

இந்த சட்டத்தை பயன்படுத்தி ஆபாச வியாபாரிகள் செய்த கூத்து இருக்கிறதே...அப்பப்ப்பா. 

படங்களுக்கு சிறிதும் சம்மந்தமில்லாத தலைப்புக்களை தமிழில் வைத்துவிட்டு, படம் முழுவதும்  ஆபாசமும்  வன்முறையும்  வெறும் கேலிக்கூத்துமாக நிரப்பி வைத்து வரிவிலக்கு பெற்ற  படங்கள்தான் எத்தனை எத்தனை. 

தமிழ்கலாச்சாரம் என்ற பெயரில் வெளிநாடுகளில் கூத்தடித்து எடுக்கப்படும் படங்கள், ஆபாச படங்கள், அருவருப்பான பண்டங்கள் என்று வரிவிலக்கு பெற்றன.

சினிமாக்கூத்தாடிகள் ஏதோ அன்றாடம் கூழுக்கும் கஞ்சிக்கும் பிச்சை எடுப்பதுபோல வரிவிலக்கு பெற்று மக்கள் பணத்தை இந்த வகையிலும் கொள்ளையடித்தன..

சினிமாக்காரர்களுக்காகவே தனது ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஜால்ரா சத்தமே தனது ஆட்சியை காப்பாற்றும் என்று கிறுக்குத்தனமாக இந்த கூத்தாடிகளில் பாராட்டுவிழா ஜால்ரா விழா என மூழ்கிக்கிடந்தார்.

ரஜினிகாந்த்  என்கிற மிகப்பெரிய கூத்தாடி நடித்தார் என்ற காரணத்திற்காக, "சிவாஜி" என்ற பெயர்கூட தமிழ் பெயராக தெரிந்தது இந்த தமிழ்பெரியாருக்கு . 

இப்படி மக்களை சாராயாத்திலும், சினிமாக்களில் மூழ்கிவிட, கடந்த ஆட்சிக்காலத்தில் கூத்தாடிகள் கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வந்தனர்.

அதற்கெல்லாம் இந்த ஆட்சியில் ஜெயலலிதா ஆப்பு வைத்துவிட்டார்..  

சினிமாவில் வன்முறை ஆபாசம் அதிகம் இருந்தால் வரிவிலக்கு கிடையாது என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது...

அது போக தமிழில் பெயர் இருந்தாலும் "யு" சர்டிபிகேட் பெற்றிருந்தால்தான் வரிவிலக்கும் என்று அறிவித்துள்ளது..?

இன்றைய ஆபாசக்கூத்தாடிகளால் ஆபாசம் அருவருப்பான காட்சிகள், வன்முறை என்று இல்லாமல் படம் எடுக்க முடியுமா?

அல்லது
இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு கொடுக்கவேண்டும்?

வரிவிலக்கு கொடுக்கும் அளவுக்கு எவனாவது தரமான படம் எடுக்கிறானா?

சினிமா என்றாலே ஆபாசமான வியாபாரம்தான்.
இவர்களுக்கு எந்த  காரணம் கொண்டும் வரிவிலக்கு மட்டுமல்ல...எந்த விதமான சலுகையும்  கொடுக்ககூடாது என்பதே நல்ல முடிவாக  இருக்கும்.

அவன் வியாபாரம் செய்கிறான்..மக்களை வழி கெடுக்கிறான்  கோடி கோடியாக சம்பாதிக்கிறான்..

அப்புறம் ஏன் வரிவிலக்கு, இதர சலுகைகள் மற்றும் விருதுகள்?

Thursday, July 21, 2011

நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்

"பயனுள்ள தகவல்" என்ற தலைப்பில்  எனக்கு அடிக்கடி ஒரு ஈமெயில் ஒரு நண்பர் அனுப்பி வருகிறார்.

அதில் இதுபோன்ற நிறைய செய்திகள் வருகிறது..

கீழ்க்கண்ட கதை மனதை கவர்ந்தது..



மவுண்ட் ரோடு, டி.வி.எஸ்., ஸ்டாப்பில் தான், நான் ஏறினேன்.

11 எச் நிறைந்து வழிந்தது; முண்டியடித்து ஏறினேன்.

இடதுகால் ஸ்லிப் ஆகி விடப் போகிறதோ என்ற பயம் வேறு. பதிமூன்று வருடங்களுக்கு முன், விபத்தாகி, முட்டியில் பந்து கிண்ண மூட்டில், பந்தில் மெல்லிய விரிசல்.

பரிசோதித்த டாக்டர், "ப்ளேட் எல்லாம் இந்த வயசில் வைக்க வேண்டாம்... மூணு மாசம், "பிசியோதெரபி'க்கு அப்புறம் பார்த்து நடங்க. ஹீல்ஸ் வெச்ச ஷூ போடாதீங்க... கால் ஸ்லிப் ஆச்சுன்னா, பந்து நகர்ந்து உட்காரும்... உயிர் போற மாதிரி அஞ்சு நிமிஷம் வலிக்கும்; அப்புறம் சரியாகும்...' என்றார்.

என்னதான் அவர் சொன்னபடி, ஜாக்கிரதையாய் நடந்தாலும், குறைந்தது ஐம்பது முறைக்கு மேல், ஸ்லிப் ஆகி, "ஐயோ' என்று காலைப் பிடித்துக் கொண்டு, தட்டுத்தடுமாறி கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து, காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு, பின் மெல்ல காலை நீட்டி உதறி எடுத்து, நடந்து சமாளித்து, வலி மறக்க, பத்து நிமிடமாவது ஆகிவிடும்.

கண்டக்டரிடம் பத்து ரூபாய் நீட்டினேன்.

""ஒரு அஞ்சு ஐம்பது...''

""அம்பது காசு இல்லை...''

""எல்லாரும் இப்படியே பத்து ரூபாய் நோட்டாய் நீட்டினால், நான் என்ன அடிச்சா தரமுடியும்... வெய்ட் பண்ணுங்க...'' நாலு ரூபாய்க்கான, இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்களையும், டிக்கெட்டையும் கிழித்து நீட்டினார்.

அடுத்த ஸ்டாப்பில் கூட்டம் ஏற, இன்னமும் நெருக்கியது.

""முன்னால் போங்க சார்... எல்லாம் படிச்சவங்களா இருக்கீங்க, அறிவு வேண்டாம்?'' கண்டக்டர், ஏகவசனத்தில் திட்டினார்.

அவரே""யோவ்! உன்னைத்தான், ஐம்பது பைசா இறங்கறதுக்குள்ளே தரேன், நகருங்க... அங்கயே கம்பியை பிடிச்சுட்டு அட்டை மாதிரி ஒட்டிட்டு நிக்கறீங்க...'' எனக்கும் வசவு. நகர்ந்தேன்.

நகர்ந்து, நகர்ந்து முன்னால் போய்விட்டேன். கூட்டம் முட்டி மோதியது. ஆணாவது, பெண்ணாவது... யார், யார் மீது மோதுகின்றனர், முட்டுகின்றனர், நசுக்குகின்றனர் என்று, ஒன்றும் புரியாத கூட்டம். முகம், கழுத்து, தோள்பட்டை என வேர்வை நாற்றத்தோடு.

இறங்க நாலு ஸ்டாப் இருக்கும் போதே, ஞாபகப் படுத்தினேன்.

""தரேன் சார்! வந்தா தரமாட் டேனா... எட்டணாவுக்கு ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க?''

எனக்கு ஈகோ பற்றிக் கொண்டது. என் கைத் தொலைபேசியை எடுத்தீ��் வ�""மெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன், கண்ட்ரோல் ரூம்...''

""சார் நான் 11எச், ஐயப்பன்தாங்கல் போற பஸ்சில் பயணம் பண்ணிட்டிருக்கேன்... பஸ்சில் ஏற்கனவே அளவுக்கு மீறி கூட்டம் இருக்கு... எனக்கு ஐம்பது காசு சில்லறை தரணும்... கேட்டா என்னென்னமோ பேசறாரு...''

""டேஷ் போர்ட் நம்பரை சொல்லுங்க சார்...''

நான் நின்ற இடத்திலிருந்து டிரைவர் சீட் அருகில், திருக்குறள் பக்கத்தில் நம்பர் இருந்தது. கே என் 7024; சொன்னேன்.

""கண்டக்டர்கிட்ட கொடுங்க...''

பயணிகள் மூலம் கைப்போனை, கண்டக்டருக்கு பாஸ் செய்தேன். நின்ற இடத்திலிருந்தே கத்தினேன், ""டூட்டி ஆபிசர் லைன்ல இருக்காரு... பேசுப்பா.''

கண்டக்டர் கைகள் நடுங்க, கைப்போனை வாங்கினான்.

""யெஸ் சார்... சரி சார்... ஓ.கே., சார்... காலையில டிப்போ ஜி.எம்.,க்கு ரிப்போர்ட் பண்றேன் சார்.''

ஐம்பது காசுடன் திரும்பி வந்தது போன். நான் இறங்க வேண்டிய இடம் வர, இறங்கி விட்டேன்.

இறங்கும் போது, ஓட்டுமொத்த பஸ்சும், என்னை ஏதோ கதாநாயகனைப் பார்ப்பது போல் பார்த்தது.

ஒரு வாரம் கடந்திருக்கும்.

பாண்டிபஜாரில் வங்கிக்குப் போய்விட்டு, ஓரமாய் நடந்து கொண்டிருந்தேன். நேரே பார்த்து கொண்டு நடந்ததில், கீழே ரோடை ஓட்டி இருந்த சிறுபள்ளம், கண்ணில் படவில்லை.

மடங்கி கீழே விழுந்தேன்.

"ஐயோ' என்று அலறல் போட்டேன். முட்டியில் வலி உயிர் போனது.

யாரோ என்னை தூக்கி, பிளாட்பாரத்தில் உட்கார வைத்து, காலை மெல்ல நீட்டி, நீவி விட்டனர்.

""பந்து கிண்ண மூட்டு ப்ராப்ளமா சார்... எவனுக்கும் நடக்கவே தெரியாது... ப்ளேட்டும் வைக்கலை... இப்படி அடிக்கடி விழுந்துட்டு அவஸ்தை படுவான்...''

""ரொம்ப நன்றிப்பா.''

நிமர்ந்து பார்த்தேன். 11 எச் கண்டக்டர்.

""என்னப்பா நீயா... நல்லாயிருக்கியா?''

""ஏதோ இருக்கேன் சார்... நான் டெம்பரரி ஸ்டாப்... நீங்க பண்ண புகார்ல, ஜி.எம்., ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு... ரெண்டு நாள் டூரிஸ்ட் கார் டூட்டி கிடைச்சது. என்ன சார் பண்றது, காலையில ஆறு மணிக்கு முதல் சிங்கிள் எடுக்க, அஞ்சு மணிக்கு கிளம்பி வரணும். ஒரு, "ட்ரிப்'புக்கு ஆயிரத்து எழுநூறு ரூபா கட்டணும், இரண்டாயித்து ஐந்நூறு தாண்டினா, டிப்போ மானேஜர் லேசா இளிப்பாரு.

""இன்சன்டிவ், டெம்ரரி ஸ்டாபுங்க மேல எப்ப குறை, புகார் வரும்ன்னு, கழுகு மாதிரி காத்திருப்பாங்க... அதை விடுங்க சார்... நாளைக்கு டூட்டி... இங்க பிரெண்ட்டை பார்க்க வந்தேன்... பார்த்து போங்க சார்... சத்தியமா சார். உங்க போன், கையில வர்றப்ப தான், ஒரு புண்ணியவான் நாலு ஐம்பது காசு கொடுத்து, டிக்கெட் வாங்கினார்; கொடுத்துட்டேன்.

""நாங்க என்ன சார் பண்றது. ஒரே டென்ஷன் ஜாப்... இப்ப பாருங்க இந்த பள்ளத்துல வழுக்கி விழுந்திருக்கீங்க... ரோடு கான்ட்ராக்டர், பல கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ரோடை போட்டிருக்கான்... நீங்க இல்ல, உங்களை மாதிரி எத்தனை பேரு இங்க விழுந்திருப்பாங்க...

""இதுக்கு நீங்க போன் பண்ணி, ஒவ்வொரு இடமாய் தகவல் போய், கான்ட்ராக்டர் உங்க வீட்டுக்கு, ஆட்டோ அனுப்புவான்... பணம் சார் பணம்... நான் இந்த வேலைக்கு, பெண்டாட்டி நகையை வித்து, ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து வந்தேன்... அதை விடுங்க, சொந்த கதை. பார்த்து போங்க சார்.''

கைப்பிடித்து தூக்கி விட்டான்.

""பார்த்து போங்க சார்... எல்லாமே ஓட்டைதான்... நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்...''

நான் மெல்ல நடந்தேன்.

நான் ஒழுங்காக போகிறேனா என்று, அங்கேயே நின்றபடி இன்னமும் பார்த்து கொண்டிருந்தான்.

எங்குதான் ஓட்டை இல்லை. ஒவ்வொருவனாய் கண்டுபிடித்து, சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால், நம்மை அல்லவா சல்லடை ஆக்கி விடுவர்.

நானும் உள்ளுக்குள்ளேயே, எல்லாவற்றையும் பூட்டி வைத்து, புழுங்கிச் சாகும், புழுவாகி போனது போல் உணர்ந்தேன்.
                                                                                       

                             நன்றி : பயனுள்ள தகவல்கள்


Wednesday, July 13, 2011

தைரியலட்சுமி....ரஞ்சிதா


ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள்...எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்ற எந்த தகவலும் இல்லை..(அவ்வளவு முக்கியமானவரா?)

இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின்  போலி வேடத்தை வெளிக்கொண்டுவர கருவியாக - அல்லது இயற்கையாகவே - பயன்பட்டவர்..அந்த சமயங்களில் இவர் தலைமறைவாகி விட்டார்..

ஆபாச விகடன் , குமுதம், நக்கீரன் போன்ற ஆபாச பத்திரிக்கைகள் ஏதேதோ தத்தமது கற்பனைகளை வெளியிட்டு விட்டு விபச்சாரம்..ஆமாம்..வியாபாரம் என்ற பெயரில் பத்திரிகை விபச்சாரம் செய்தன..

நாளிதழ்கள் நாளொரு கற்பனைகளை வெளியிட்டு மகிழ்ந்தன...

இடையில் ஒரு ஆபாச பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ரஞ்சிதா..தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் முதல்வர் (ஆக இருந்த) கருணாநிதிதான் தமக்கு பாதுகாப்பாக இருந்ததாகவும்  சொன்னார் .

இன்று ஆட்சி மாறியதும், நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் மாறி மாறி சன் டிவி, மற்றும் தினகரன் பத்திரிக்கைகளை குற்றம் சாட்டுகின்றனர்..ஆம் அவர்கள் செய்ததது தவறுதான்..வீடு வரைக்கும் ஆபாசக்காட்சிகளை கொண்டு சென்று ஆபாச வியாபாரம் செய்தார்கள்..
அதற்கு மற்ற  பத்திரிக்கைகளும் துணை நின்றன..

அன்று கருணாநிதி பாதுகாவலாக நின்றார் என்று சொன்ன அதே ரஞ்சிதாதான் இன்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடந்த அரசு தம்மை மிரட்டியது என்கிறார்..சன் டிவி மற்றும் தினகரன் மீது பாய்கிறார்..மற்ற பத்திரிக்கைகள் இவரை கொஞ்சினவா? குற்றமற்றவர் என்று புகழ்ந்தனவா? 

தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் போலி என்று தைரியமாக சொல்கிறார்..எப்படி இவருக்கு இந்த தைரியம்  வந்தது..இவர் சொன்னவுடன் நம்புவதற்கு மக்களெல்லாம் முட்டாள்களா?

யாரோ ஏவி விட்ட அம்பாகத்தானே தெரிகிறார் இந்த தைரிய லட்சுமி?




Monday, July 11, 2011

வேங்கை - தமன்னாவின் கடைசி தமிழ்படம்?



இயக்கம் ஹரி :
ஊரில் ஒரு பெரிய மனிதர்: அவர் வார்த்தைக்கு கட்டுப்படும் ஊர்  மக்கள். ஊர் சுற்றும் அவரது ஒரே மகன்.தந்தை என்றால் அடங்கி ஒடுங்கி செல்லும் பணிவு. தந்தை சொல் தட்டாதவன். அவருக்கு அதே ஊரில் சமமான ஒரு எதிரி..அவனால் மகனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று நினைக்கும் தந்தை. அவரது மகனை சுற்றும் காமெடியன் மற்றும் அல்லக்கைகள்.  இறுதியில் கதாநாயகன் விரும்பிய பெண்ணுடன் திருமணம் . சுபம். - இன்னும் எத்தனை படம்தான் இதே போல இயக்கிக்கொண்டிருக்கப் போகிறாரோ ?


ராஜ்கிரண்.:
ஊரில் பெரிய அந்தஸ்தில் உள்ள ஊர் பெரியவர். ஊருக்காக பல நன்மைகள் செய்தவர்..அவருக்காக உயிரையே தர தயாராக இருக்கும் ஊர் மக்கள். ஊர் சுற்றும் ஒரே மகன். தந்தை என்றால் அடங்கி ஒடுங்கி செல்லும் பணிவு. தந்தை சொல் தட்டாதவன். கட்டுபெட்டியான மனைவி...மகன் மேல் வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு பாசம். உள்ளூரை மட்டுமல்ல சுற்று வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள மனிதர் - இன்னும் எத்தனை படங்கள்தான் இதே பாத்திரத்தில் நடிப்பாரோ...?


தனுஷ் :
தந்தை சொல் தட்டாத தனையன். தந்தை மேல் அளவுகடந்த பாசம். எப்போதும் நண்பர்களுடன் ஊரு சுற்றிக்கொண்டிருப்பது. அநியாயத்தை கண்டால் பொங்கி எழுவது. பலமடங்கு அழகான தனக்கு சற்றும் பொருத்தமில்லாத பெண்ணையே சுற்றி சுற்றி வந்து காதலுக்கு புதுவிதமான விளக்கம் சொல்லி - ஆபத்தில் அவளுக்கு உதவி அவள் காதலிக்க ஆரம்பித்தவுடன் அவளை தவிக்க விடுவது - இன்னும் எத்தனை படங்கள்தான் இதே மாதிரியே நடித்துக்கொண்டிருப்பாரோ?

தமன்னா :
அரை கிருக்காக அறிமுகம் ஆகி, பின்னால் குடும்பத்தில் பெரும் சோகத்தை வைத்துக்கொண்டு, காதலிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே காதலில் விழுவது..இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி நடிப்பது என்று நினைத்துதான் வேறு தமிழ்படங்களில் நடிப்பதில்லையோ?

பிரகாஷ் ராஜ்:
அடக்க ஒடுக்கமான மனிதராக இருந்து, ஊரு பெரியவரின் ஆதரவுடன் பெரிய அரசியல்வாதியாகி, அவருக்கே துரோகம் செய்து கடைசியில் மண்ணை கவ்வுவது..: இன்னும் எத்தனைப்படங்களில்தான் இதே வில்லத்தனத்தை செய்து கொண்டிருப்பாரோ?

காமெடியன் :
ஊரில் ஏதாவது பெட்டிக்கடையோ - இந்த படத்தில் சைக்கிள் கடை - ஏதோ ஒன்று வைத்துக்கொண்டு, நாலைந்து அல்லக்கைகளுடன் வருகிறவன் போகிறவனை எல்லாம் கலாய்த்துக் கொண்டு ஊரில் வியாபாரம் செய்வது. கதாநாயகனுக்கு கண்டிப்பாக நண்பனாக இருப்பது. அவனுக்கு ஆபத்து எனும்போது - வியாபாரத்தை எல்லாம் விட்டு விட்டு அவனுக்கு துணையாக அவன் கூடவே இருப்பது: - இன்னும் எத்தனைப் படங்களில்தான்  இதை காமெடி என்று காட்டுவார்களோ..

ரசிகர்கள் : 

தினசரிகள் , மற்றும் ஆபாச பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை பார்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் முதல் நாளே படம்பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவது : இன்னும் எத்தனை நாள்தான் இப்படி ஏமாந்துகொண்டே இருப்பானோ..

மர்மயோகி :
இப்படி எல்லாப்படத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது : - இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி குறை சொல்லிக்கொண்டே இருப்பானோ...

மேற்கண்ட எல்லாமே எல்லாரும் எல்லா படங்களிலும் செய்து வந்ததை இதே படத்திலும் அத்தனை பேரும் அதேபோன்றே நடித்துகொண்டிருக்கிரார்கள்..

காமெடி என்ற  பெயரில் "கஞ்சா கருப்பு" பண்ணுவது மிக மட்டமான கேவலமான, அருவருப்பான, ஆபாசமான  ரகம்.

வில்லன்களில் வேலையே  சவால் விட்டு சவால் விட்டு கதாநாயகனிடம் அடிவாங்குவதாகவே இருக்கிறது..

ராஜ்கிரனை கொல்வதற்காக தமன்னா வருவது - வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காட்சி. கதைக்கு அது தேவையே இல்லை. ஒரு சமயம் இயக்குனருக்கே தாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியே கதை பண்ணுவதால் இப்படி ஒரு காட்சியை வித்தியாசமான கதை என்று காட்ட திணித்து இருக்கலாம்   அதற்க்கு காரணமான காட்சியும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.  அதோடு தான் தவறு செய்யவில்லை என்று  ராஜ்கிரண் தமன்னா குடுமத்தினரிடம் சொன்னவுடன் அவர்கள் மனம் திருந்துவதும் இது ஒரு தேவையற்ற காட்சி என்றே உணர்த்துகிறது. .பாடல்களும் அலுப்பூட்டுகின்றன..

வேங்கை - பல ஆட்டுக்கல்கள், கிரைண்டர்கள், மிக்சிகள் என்று  அரைத்து அரைத்து சலித்து புளித்துப்போன மாவு..





Thursday, July 7, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : தயாநிதி ராஜினாமா ; பிரதமரை சந்தித்து கடிதம் கொடுத்தார்



 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியை இன்று மதியம் ராஜினாமா செய்தார். தயாநிதி ராஜினமா கடிதம் கொடுத்தார் என்பதை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க., வட்டாரமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை. முன்னதாக தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி ஆலோசனை நடத்தியதாகவும், இதன் பின்னரே ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.




2004- 2007 ஆம் ஆண்டு கணக்கில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.



இந்த புகாரை அடுத்து ஏர்செல் நிறுவன மாஜி உரிமையாளர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இதில் தயாநிதி தமக்கு அலைவரிசை ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று. விற்ற உடன் இந்த நிறுவனத்திற்கு உடனடியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த காலக்கட்டத்தில் சன் டி.டி.எச்., நிறுவனத்தில்., மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்தது. இதனால் தயாநிதி அமைச்சரவையில் நீடிக்க கூடாது என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வக்கீல் இது தொடர்பான விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இதில் தயாநிதி மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தயாநிதி எந்நேரமும் ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று மதியம் டில்லியில் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தயாநிதி பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டு சென்று விட்டார். முன்னதாக இன்று காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றார்; ஆனால் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .



Monday, July 4, 2011

"180" - எந்த முட்டாள் இந்த படத்தை எடுத்தான்?

கிறுக்குத்தனமாக பேரை வைத்துவிட்டு, வித்தியாசமாக  படம் எடுப்பான் என்று மக்களை ஏமாற்றும் உக்தியை நிறைய முட்டாள் இயக்குனர்கள் பின்பற்றி படம் எடுத்து ஒழிந்து போகிறார்கள்.


பெரும்பாலும் - இந்தமாதிரி விளம்பரம் செய்து படம் வெளியிடுபவர்கள் முதல் படம் சற்று சுமாரகக்கூட இருக்கும்..முதல் படம் என்பதால் சற்று யோசித்தாவது எடுப்பார்கள்..இப்படி முதல் படத்திலேயே தனது முட்டாள்தனத்தை பறை சாற்றிய இயக்குனர் இந்த படத்தின் இயக்குநராகத்தான் இருப்பான். கொஞ்சம் கூட கதைக்காக சிரமப்படவில்லை..ஏற்கனவே வெளியான "இதயத்தை  திருடாதே", " பூவே பூச்சூடவா", " கிங்" , போன்ற படங்களின் கதைகளை உருவி - ரொம்ப சீரியஸ் படம் மாதிரி கொடுத்து இருக்கிறான்.

அமெரிக்காவின் பிரபல டாக்டர் (அது என்னமோ தெரியலே இங்கேர்ந்து போறவனெல்லாம் அமெரிக்க போனா உலகத்திலேயே அதிசயமான டாக்டராகவோ, விஞ்ஞானியாகவோ ஆகிவிடுகிறான் - படத்தில்தான்)  விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு வைத்தியம் பார்கிறான்..அடுத்த நிமிசமே - தமிழ்சினிமா வழக்கப்படி - ரெண்டுபேரும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்..

ஒருகட்டத்தில் ஒரு குழந்தைக்கு விபத்தொன்றில் விரல் துண்டாகி விடுகிறது..அதை இந்த டாக்டர்தான் ஆபரேஷன் மூலம் சரி செய்கிறான்..இந்த காட்சியை பார்த்தவுடன்  வேறு எதோ கட்டத்தில் கதாநாயகியின் தலை துண்டாகிவிடும் அதை ஒன்று சேர்த்து பிழைக்கவைக்கும்  காட்சி ஏதாவது வைத்துவிடுவார்கள் என்று நினைத்தேன்..நல்லவேளை அப்படி ஏதும் இல்லை..

சில கிறுக்குத்தனமான காட்சிகள் பாடல்களுக்கு அப்புறம் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து விடுகிறது..அப்புறம் தேவை இல்லாமல் கதாநாயகனுக்கு ஒரு வியாதியை கொண்டு வருகிறார்கள்..(pancreatic cancer)  கணையத்தில் கேன்சர் என்று சொல்லி படத்தை ஓட்டப்பார்கிரார்கள்..தலை வலிக்கிறது..கதாநாயகன் ஆறுமாதம்தான் உயிருடன் இருப்பான்   என்று பெரிய டாக்டர் சொல்லா தலைவலி ஆரம்பம்..அதைவிட அந்த பிரபல அதிசய டாக்டர் பைத்தியம் பிடித்தவன் போல ஊரை விட்டு, மனைவியை விட்டு ஓடி இந்தியா வருகிறான்..

அங்கே இவன் வந்து இறங்கியவுடன், கணவன் மனைவி இரண்டு பேர் இவனுக்காக ஒரு வீட்டை  தயாராக வைத்திருக்கிறார்கள்..
இன்னொரு கதாநாயகி இவனை காதலிக்க தயாராக இருக்கிறாள்..
சில தரைப்படையை சேர்ந்த சிறுவன்கள் நண்பர்களாகின்றனர்..
இவன் கவலையெல்லாம் மறந்து தரைப்படை சிறுவர்களுடன் சுண்டல் விற்கிறான், பேப்பர் போடுகிறான், சாக்கடை அள்ளுபவர்களுக்கு டீ வாங்கிதருகிறான்..ஆனால் ஒரு வேலையும் செய்யவில்லை..
அப்புறம் இந்தியாவில் இவன் மேல் காமம் (?) கொள்ளும் கதாநாயகி..அவள் முதல் காட்சியில் ஏதோ போடோகிராபர் என்று காட்டுகிறார்கள்..அப்புறம் முழுநேர வேலை இந்த கேன்சர் டாக்டரை சுற்றுவதுதான்..

கதாநாயகனாக நடித்தவனுக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை..அதை விட கொடுமை - படத்தை அனைவருமே கிண்டலும் நக்கலுமாக பார்த்துக்கொண்டிருக்கையில், வீட்டு ஓனர்களாக நடிக்கும் மௌலியும், கீதாவும், ரொம்ப சீரியசாக நடித்து காமெடி பண்ணுகிறார்கள்.

கதாநாயகி தன காதலை சொன்னவுடன் கதாநாயகன் ஊரை காலிபண்ணிவிட்டு ஓடுவதும், அவனை பின்தொடரும் கதாநாயகி ஒரு விபத்தில் படுகாயம் அடைவதும் அடுத்த காமெடி..அப்புறம் அடுத்தநாளே அவளை வைத்தியம்  பார்பதற்கென்று  அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது உச்சகட்ட காமெடி..இந்த மாதிரி விபத்திற்கெல்லாம் அமெரிக்கா கொண்டு செல்வது எனபது இந்திய மருத்துவத்துரையையே கேவலப்படுத்துவது மட்டுமின்றி  - அமெரிக்காவின் கைக்கூலி போன்றும் இவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்..
அது போக - அமெரிக்க விசா எடுக்க இங்கே நிறைய அடிமைகள் மாதக்கணக்கில் காத்திருக்க, இந்த பெண் அன்றிரவே அமெரிக்கா செல்வது படம் பார்ப்போரை மகா முட்டாளாக்கும் பைத்தியக்காரத்தனம்.

இறுதிக்காட்சியில் முதல் மனைவியை அமெரிக்காவில் தவிக்க விட்டதுபோல், இவளையும் ஏமாற்றி விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, பிரேசில் செல்கிறானாம்..அங்கே இன்னொருத்தியை இதுமாதிரி ரூட் விட்டு அவ வாழ்க்கையையும் கெடுப்பதற்காம்..  என்னங்கடா கதை எடுக்குறீங்க?..


அதுகிடக்கிறது..இவனுக்கு டாக்டர்கள் ஆறுமாதம் தான் உயிருடன் இருப்பான் என்று கெடு வைத்திருக்க, இவனோ ஆறுமாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாடாக அலைந்துகொண்டு காதலித்துகொண்டிருக்கிறான் ..கொடுமைடா ....